'தமிழ்'க்கு தமில்.. 'மன்னிக்கவும்'க்கு "மனிக்கவும்".. குஷ்புவை கடுமையாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பூ. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர். சற்று பப்ளியாக இருந்த குஷ்பூ, ஸ்லிம் பிட்டான நடிகைகள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றியவர்.
இப்படி பிரபல நடிகையாக வலம் வந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பு, சமீபகாலமாக கடின உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் முதல் படத்தில் பார்த்த மாதிரி இருக்கீங்க, இப்போ கூட ஹீரோயினா நடிக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். அவரிடம் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்றெல்லாம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த குஷ்பு, தான் தினமும் வாக்கிங் சென்றதாகவும், அதன் மூலமே உடல் எடையை குறைத்ததாகவும் கூறினார். உடல் எடையை குறைத்த பின்னர் நடிகை குஷ்பு, விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவ்வாறு அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் தினந்தோறும் உங்களின் வயது குறைந்துகொண்டே செல்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஏராளமான பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும், ஒரு சில நெகடிவ் விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு குஷ்புவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது, குஷ்பவின் பதிவு ஒன்று நெட்டிசன்களிடையே கடுமையாக கேலி கிண்டலுக்குள்ளாக மாறியுள்ளது. நடிகை குஷ்பு தமிழ் மொழியை பற்றி பெருமையாக ட்வீட்டரில் பதிவிட்டு இறுதியாக ‘தமிழ் வாழ்க’ என்று எழுதுவதற்கு பதில் ‘தமில் வாழ்க’ என எழுதியுள்ளார்.
மேலும் தவறை உணர்ந்த குஷ்பு உடனே தமிழ் வாழ்க என மாற்றிவிட்டு,எழுதும் பொழுது பிழை ஆகிவிட்டது என்று கூறி ‘மன்னிக்கவும்’ என்பதற்கு ‘மனிக்கவும்’ என மீண்டும் தவறாக தமிழை எழுதியுள்ளார். இதனால் இவரை நெட்டிசன்கள் கடுமையாக கேலி செய்து வருகின்றனர். சிலரோ தவறு செய்வது மனித இயல்பு ஆனால் அதனை சரி செய்துகொள்ள முயற்சிப்பது நல்லது எனவும் கூறி வருகின்றனர்.