பிரபாஸ் உடன் காதல்? உண்மையை மறைக்காமல் ஓப்பனாக போட்டுடைத்த நடிகை
‘பாகுபலி’ படத்தில் வீரம் நிறைந்த அரசனாக நடித்து இந்திய திரையுலகையே ஆச்சர்யப்பட வைத்தவர் நடிகர் பிரபாஸ். அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். பாகுபலி படத்தில் நடித்தபோது, இவருக்கும் அனுஷ்காவும் இடையே காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் இருவரும் தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று கூறி காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதையடுத்து தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸ், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலிப்பதாக தகவல் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபாஸ் புரபோஸ் பண்ணியதாகவும், இதனையடுத்து பிரபாஸின் காதலை ஏற்றுக்கொண்ட கீர்த்தி சனோன் அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் உலா வந்தன.
இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் வருண் தவான் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சனோன் மனதில் இருப்பவர் தற்போது மும்பையில் இல்லை என்றும் அவர் தீபிகா படுகோனே உடன் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறி இருந்தார். அவர் பிரபாஸை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார் என்பதை உறுதி செய்த நெட்டிசன்கள் பிரபாஸ் - கீர்த்தி சனோன் இடையேயான காதல் உண்மை என பதிவிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன் இதுகுறித்து முதன்முறையாக தனது இன்ஸ்டாவில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி தன்னைப்பற்றி பரவி வரும் காதல் செய்திகள் துளியும் உண்மையில்லை என்றும் அவை அனைத்தும் வதந்திகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பிரபாஸை தான் காதலிக்கவில்லை என்பதை உறுதிபடுத்தி உள்ளார் கீர்த்தி சனோன்.