Interesting சஸ்பென்ஸ் - திரில்லர் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியிட்ட 'கொலை' படக்குழு !
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் போன்ற பல முகங்களை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. 2005ம் ஆண்டு சுக்ரன் என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், நான், பிச்சைக்காரன் என பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
நாக்க மூக்க, மஸ்காரா போட்டு போன்ற பாடல்கள் மூலம் மிக பேமஸ் ஆன இவர், நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, காளி, கொலைகாரன் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
தற்போது, காக்கி, பிச்சைகாரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கொலை படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், சிதம்பரம் என பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வைரல் ஆனது.
இந்நிலையில், இப்படத்தின் Motion Poster தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.