ஸ்டைலிஷ் லுக்கில் மகனுக்கே டஃப் கொடுக்கும் விக்ரம்.. Promotion பணிகளில் தங்கலான் படக்குழு..!

kiss-of-kollam-stylish-vikram-at-thangalaan-promotion

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார்.

அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.

பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் தங்கலான் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில வாரங்களை இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

kiss-of-kollam-stylish-vikram-at-thangalaan-promotion

இதையொட்டி, படத்தின் முக்கிய பிரபலங்கள் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பா ரஞ்சித் ஜிவி பிரகாஷ் மற்றும் ஞானவேல் ராஜா கேரளாவில் பிரமோஷன் பணிக்காக சென்றிருந்தனர்.

அப்போது, கேரளாவில் ரசிகர்கள் பட குழுவினர் மிக வரவேற்பு கொடுத்தனர். அதில், மிகவும் ஸ்டைலிஷ் ஆக ஸ்லோவாகவும் கோட் சூட்டில் மிரட்டியுள்ளார். இந்த படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post