கிஷோரா இப்படி நடித்தது..? படுகிளாமரான படுக்கையறை சீன் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷோர். இவர் ஹீரோவாக நடித்து 2013ம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக கிஷோர் பல விருதுகளையும் பெற்றார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் திரைப்படங்களிலும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக பல படங்ககளில் துணை கதாபாத்திரத்தில் நடித்துவந்தாலும், கடந்த ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன், காந்தாரா படத்தில் முக்கியமனா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மக்கள் மனதில் பாப்புலர் ஆனார்.
இந்நிலையில், கிரைம் திரில்லர் ஆக உருவான ஷி வெப் சீரிஸ் கடந்த ஆண்டு ஜூன் 11 வெளியானது. இந்த வெப்சீரிஸ் பல மாதங்களுக்கு முன்பு வெளியானாலும் தற்போது பேச்சு பொருளாக மாறியுள்ளது. இதில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் இளம் பெண்ணாக வந்த அதிதி இப்படத்தில் படுகிளாமரில் நடித்திருக்கிறார்.
படத்தில் கிஷோர் டாக்ஸிக் வில்லனாக நடித்திருந்தாலும் பல ஆபாச காட்சிகள் நடித்திருப்பதால் முகத்தை சுளிக்க வைத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள், கிஷோரா இது என அதிர்ச்சியில் உள்ளனர்.