கே.ஜி.எப் பட நடிகருக்கு ஏற்பட்ட விபத்து.. நடிகர் வெளியிட்ட பதிவு வைரல் !
2018ம் ஆண்டு கேங்ஸ்டர் படமாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் KGF. இப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றி பெற்றதால் இப்படத்தின் 2ம் பாகத்தை பெரும் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுவிட்டது.
பான் இந்தியா படமாக தயாரான இப்படத்தின் 2ம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டன. வெளியாகி வெகு சில நாட்களிலேயே 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3ம் பாகமும் படக்குழு அறிவித்தனர்.
2022ம் ஆண்டு முதல் பாதியில் பிரம்மாண்ட வெற்றியடைந்த திரைப்படத்தில் கே.ஜி.எஃப் 2 ஒன்று. அப்படி புகழ்பெற்ற இப்படத்தில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் பி.எஸ்.அவினாஷ். இதற்கு முன், அதிக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கே.ஜி.எப் திரைப்படம் மூலம் தான் இவர் அதிக பிரபலம் அடைந்தார்.
இதனிடையே அவினாஷ் கடந்த புதன்கிழமை அன்று காலை பெங்களூரில் கார் விபத்தில் சிக்கியுள்ளார். வழக்கமாக செல்வதை போல, ஜிம்மிற்கு செல்லும்போது, வழியில் வந்த டிரக் மீது அவரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் எந்தவித காயமின்றி தப்பித்துள்ளார்.
இதனிடையே தனக்கு நடந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அவினாஷ், தன்மீது அக்கறைக் காட்டிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவினாஷ்.