கண்ணாளனே… அழகிய குரலால் பாடி அசத்திய கீர்த்தி சுரேஷ் - வீடியோ!

keerthy-suresh-singing-video-viral-on-interent

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

keerthy-suresh-singing-video-viral-on-interent

இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான. தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் “பேபி ஜான்” திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப 4 சீசன் 4 நிகழ்ச்சியில் “செலிப்ரேடிங் கேப்டன் விஜயகாந்த்” என சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

keerthy-suresh-singing-video-viral-on-interent

அப்போது அந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அழகான குரலால் “கண்ணாலனே” பாடலை பாடி அசத்திருந்தார் உடனே அங்கிருந்த போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் எல்லோரும் கீர்த்தி சுரேஷின் குரலை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக கீர்த்தி சுரேஷுக்கு பாடுவதிலும் இவ்வளவு திறமை இருக்கிறதா? என ரசிகர்கள் வியந்து அந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கி இருக்கிறார்கள் கீர்த்தி சுரேஷ் நடிகை என்பதையும் தாண்டி திரைப்படங்களுக்கு பின்னணி பாடகி ஆகவும் சில பாடல்களை பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வைரலாகும் வீடியோ:

Share this post