'அப்படிபட்ட பட வாய்ப்பே எனக்கு வேண்டாம்.. சினிமாவே தேவையில்லை' - பாலியல் தொல்லை குறித்து அதிர்ச்சி பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!

keerthy suresh says about her decision if happens abuse in industry

நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்ததன் கோலிவுட்’ல் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் இளைய மகள் ஆவார்.

keerthy suresh says about her decision if happens abuse in industry

ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து, ரெமோ, சாமி 2, தொடரி, பைரவா என விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

keerthy suresh says about her decision if happens abuse in industry

2018ம் ஆண்டு, பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடிகை சாவித்ரியை மறுபடியும் கண்முன் கொண்டு வந்தார். இப்படத்திற்கு பான் இந்தியா லெவல் வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh says about her decision if happens abuse in industry

தனது எதார்த்தமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தை கொண்ட அழகாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும், சாணி காயிதம் திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை காட்டி இருந்தார்.

keerthy suresh says about her decision if happens abuse in industry

தற்போது, மாமன்னன், தசரா, போலா ஷங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், தனக்கு பாலியல் தொல்லை சினிமாவில் நேர்ந்தால் எப்படி நடந்து கொள்வேன் என வெளிப்படையாக கூறி கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

keerthy suresh says about her decision if happens abuse in industry

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “இதுவரை எனக்கு பாலியல் தொல்லை எதுவும் நேர்ந்ததில்லை. அப்படி ஒரு எண்ணத்தில் இதுவரை யாரும் என்னை நெருங்கியதும் இல்லை. ஆனால் என்னிடம் சில நடிகைகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக கூறியுள்ளனர். ஒருவேளை, எதிர்காலத்தில், அது போல் யாராவது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் அப்படிபட்ட பட வாய்ப்பே எனக்கு வேண்டாம் என கூறி விடுவேன். சினிமாவே தேவையில்லை என வேறு வேலை கூட பார்க்க சென்று விடுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

Share this post