ஆத்தி ஹிந்திக்கு போனதும்.. அந்த விஷயத்தில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவுக்கு சென்றதும் ஆளே மாறிவிட்டார் என்று சொல்லலாம். சற்று கிளாமர் அதிகரித்துள்ளது. நெட்டிசன்களும் கீர்த்தி சுரேஷை அவ்வப்போது விமர்சித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் பேபி ஜான். இந்த பேபி ஜான் திரை படத்தை அட்லீ தயாரித்துள்ளார்.
இது தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் வருண் தவன், கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரூபாய் 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Share this post