"ஒரு நடிகையா ரொம்ப பாதிக்கப்பட்டுடேன்.." மனமுருகி பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்..

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்ததன் கோலிவுட்’ல் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் இளைய மகள் ஆவார். ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து, ரெமோ, சாமி 2, தொடரி, பைரவா என விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

2018ம் ஆண்டு, பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடிகை சாவித்ரியை மறுபடியும் கண்முன் கொண்டு வந்தார்.

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

இப்படத்திற்கு பான் இந்தியா லெவல் வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் பெற்றார் கீர்த்தி சுரேஷ். தனது எதார்த்தமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தை கொண்ட அழகாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், தனது உடலை டயட், ஒர்கவுட் என ஸ்லிம்பிட் ஆக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு நடிகையாக நிறைய வெற்றி, தோல்வி பார்த்திருக்கிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு பரீட்சை நேரமாக அமைந்தது. நான் என்னால் முடிந்த அளவிற்கு என்னுடைய பெஸ்ட் கொடுக்க கடுமையாக பணியாற்றி வருகிறேன்.

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

சாணி காயிதம் படத்திற்காக செல்வராகவன் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. என்னுடைய ரசிகர்கள் தான் என் பலமே. உங்கள் சப்போர்ட் தான் என்னை பல தடைகளை தாண்டி வர உதவி செய்கிறது.’ என பெரிய பதிவை வெளியிட்டுள்ளார்.

Keerthy suresh posts about ups and downs in her cinema journey

Share this post