'ஜூன் 9 தான உங்க Marriage ?' என நயன் - விக்கியிடம் கேட்ட கீர்த்தி சுரேஷ் !

Keerthy suresh asks about marriage to nayanthara vignesh shivan couple

தமிழ் திரையுலகில் தற்போது பிரபலமான ஜோடியாக வலம் வருவது விக்னேஷ் சிவன் - நயன்தாரா. நானும் ரவுடி தான் என்னும் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் காதலில் விழுந்த இந்த ஜோடி, 7 வருடங்கள் கடந்து இவர்கள் காதல் பயணம் தொடர்ந்து வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகி விட்டது என்பதனை நயன்தாரா, ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார்.

Keerthy suresh asks about marriage to nayanthara vignesh shivan couple

சமீப காலமாக கோவில்களுக்கு அதிகம் சென்று வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி கூறுவதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.

ஆனால், ஜூன் 9ம் தேதி இவர்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர் என்றும், திருப்பதியில் தான் திருமணம் என்றும் தகவல் வெளியானது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து அவர்கள் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Keerthy suresh asks about marriage to nayanthara vignesh shivan couple

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியிடம் ‘உங்கள் திருமணம் ஜூன் 9ம் தேதி தான?’ என கேட்டுள்ளார்.

விளையாட்டாக அவர் கேட்டிருந்தாலும் அது தான் அவர்களின் திருமணம் நடைபெறும் தேதி என்றும் நம்பப்படுகிறது. அவர்களின் திருமணமும் நிச்சயம் போல நெருங்கிய வட்டாரத்துடன் சிம்பிளாக நடக்குமா அல்லது பிரம்மாண்டமாக செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share this post