கதிர் & திவ்யபாரதி நடிக்கும் படத்தின் ரொமான்ஸ் ததும்பும் FIRST LOOK POSTER.. வைரலாகும் போட்டோ !

2013ம் ஆண்டு மதயானை கூட்டம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் கதிர். விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கதிர், சுழல் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
தற்போது Passion Studios நிறுவனம் தயாரிப்பில் கதிர், திவ்யபாரதி நடிக்கும் திரைப்படம் ஆசை. தமிழ் திரையுலகில் Bachelor படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது, ஆசை படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ‘ஆசை’ மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ரொமான்டிக் த்ரில்லர் படமான இதில், Shane Nigam மற்றும் Ann Sheetal முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். Jakes Bejoy இசையமைக்க, அருண்ராஜ் மனோகர் இயக்கினார். மலையாளத்தில் மெகா ஹிட்டான இந்த படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது.