கோவில் முன் எனக்காக மண்டியிட்டு வேண்டியவர் சூர்யா.. கண்கலங்கி கருணாஸ் பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம் !

Karunas shared his memorable experience with actor surya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கிலும் மிகப் பெரிய வரவேற்பு பெற்று வருகிறார். இவரது படங்கள் பிற மொழிகளில் டப்பிங் செய்து மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

Karunas shared his memorable experience with actor surya

எதற்கும் துணிந்தவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் என நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவரைபற்றி மேடை விழாவில் கருணாஸ் பேசியது செம வைரல் ஆகி வருகிறது.

Karunas shared his memorable experience with actor surya

நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆன கருணாஸ், பாபா, 123, வில்லன், பிதாமகன், வசூல் ராஜா என பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். மேலும், அம்பாசமுத்திரத்தில் அம்பானி, திண்டுக்கல் சாரதி என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Karunas shared his memorable experience with actor surya

நடிகர், நகைச்சுவை நாயகன், பின்னணி பாடகர் போன்ற பல அவதாரங்களை கொண்ட கருணாஸ், தற்போது சூர்யா செய்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Karunas shared his memorable experience with actor surya

கருணாஸ் சூர்யாவுடன் இணைந்து நந்தாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கருணாஸின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். கருணாஸ் படப்பிடிப்பில் இருந்தபோது குழந்தை பிறக்க நேரிட்டது. அப்போது, மனைவியை காண முடியாமல் தவித்த கருணாஸுக்காக ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என தனக்காக சூர்யா வேண்டிக் கொண்டதை நினைவுகூர்ந்து பட விழா ஒன்றில் நடிகர் கருணாஸ் கண்கலங்கி பேசியுள்ளார்.

Share this post