கத்தார் ஏர்வேஸ் தலைவரை 'முட்டாள்' என திட்டிய கங்கனா.. பின்னர் நீக்கப்பட்ட பதிவு.. வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

Kangana ranaut status getting viral on social media for qatar airways post

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத், நிறைய பிரபல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் தாம் தூம் என்னும் படத்தில் நடித்த இவர், சமீபத்தில் செல்வி. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Kangana ranaut status getting viral on social media for qatar airways post

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தக்கட் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் இழப்பை சந்தித்து பிளாப் ஆனது. இதையடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் கங்கனா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர்.

Kangana ranaut status getting viral on social media for qatar airways post

சில சமயங்களில் இவரது பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவதும், சர்ச்சைகளை ஏற்படுத்தும் வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் ஸ்பூஃப் வீடியோவை உண்மை என நினைத்து, கத்தார் ஏர்வேஸ் தலைவரை கடுமையாக சாடி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டது கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

Kangana ranaut status getting viral on social media for qatar airways post

டுவிட்டரில் ஒருவர் கத்தார் ஏர்வேஸை விமர்சித்து, அதனை புறக்கணிக்க வேண்டும் என கூறி வெளியிட்ட ஸ்பூஃப் வீடியோவை உண்மை என நம்பிய கங்கனா, கத்தார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கரை முட்டாள் என திட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Kangana ranaut status getting viral on social media for qatar airways post

பின்னர் அது கிண்டலுக்காக பதிவிடப்பட்ட வீடியோ என தெரிந்ததும் அந்த பதிவுகளை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து நடிகை கங்கனாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

Share this post