சந்திரமுகி 2வில் ஜோதிகா பதில் இவர்? சந்திரமுகியாக நடிக்கவிருக்கும் சர்ச்சைக்குரிய நடிகை!
2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, சோனு சூட், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் திரைப்படம் சந்திரமுகி. இப்படம் மலையாள திரைப்படமான Manichitrathazhu படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பார்த்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜோதிகாவின் நடிப்பு பயணத்தில் நல்ல மைல்கல்லை அமைத்து தந்தது.
இதன் தொடர்ச்சியாக, ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் 2ம் பக்கத்தில் நடிக்க, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ம் பாகம் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க 2ம் பாகம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது.
இதில் வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறனர். இப்படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடிக்க மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தான் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க உள்ளாராம்.
இயக்குனர் பி.வாசு, தான் இயக்க இருந்த வேறு ஒரு படத்தில் தான் கங்கனாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். அப்படத்திற்காக கதை சொல்ல சென்றபோது, சந்திரமுகி 2-ம் பாகம் உருவாவது குறித்து கேள்விப்பட்ட, கங்கனா அதில் சந்திரமுகியாக யார் நடிக்கிறார் என கேட்டதும், இயக்குனர் பி.வாசு அதற்காக ஹீரோயினை தேடி வருவதாக கூறினாராம். உடனடியாக நான் அந்த ரோலில் நடிக்கிறேன் என விருப்பப்பட்டு கேட்டாராம் கங்கனா. உடனடியாக பி.வாசுவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஜோதிகவை போல் இவரும் சந்திரமுகியாக மக்கள் மனதில் பதிவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.