பத்தாவது ஃபெயில்.. அப்பா, அம்மா அப்படி பண்ணது.. கமல் மகளால் பரபரக்கும் சோஷியல் மீடியா..!

kamals-daughter-akshara-haasan-open-talk-sarika

கமலஹாசன் மகளாக வாரிசு நடிகை என்ற கெத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். இவர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற கதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் அமிதாபச்சன் தனுஷ் நடிப்பில் வெளியான சமிதாப் படத்திலும் நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார்.

kamals-daughter-akshara-haasan-open-talk-sarika

தற்போது, அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன் மும்பையில் அவருடைய தாயாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன் அக்கா சுருதிஹாசன் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். சினிமாவிற்கு வரும் முன்னர் எனக்கு இந்த துறை எப்படி இருக்கும் என்று தெரியாது. நான் சினிமாவில் வந்தால் என்னை என் பெற்றோருடன் வைத்து ஒப்பிடுவார்கள் என்று தெரியும். ஆனால், எனக்கு ஒரு இடமும் அவர்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். அதேநேரம், என் தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ள அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள்.

kamals-daughter-akshara-haasan-open-talk-sarika

இதற்கு என் பெற்றோருக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். சிறு வயதில், எங்கள் வீட்டில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நீ நடிகையாக வேண்டும் நீ டாக்டராக வேண்டும் என்ற கட்டாயப்படுத்தவில்லை. சிறுவயதில், டீச்சர் நீ வளர்ந்ததும் என்ன ஆக ஆசைப்படுகிறாய் என்று கேட்டதற்கு நான் ஒரு டான்ஸ் மாஸ்டர் அல்லது ஃபுட்பால் பிளேயர் ஆவேன் என்று தெரிவித்தேன்.

என் மனதில், அது இருந்தது நடிகையாக ஆகாமல் இருந்திருந்தால், புட்பால் பிளேயர் ஆகி இருப்பேன். நான் காலேஜ் போக மாட்டேன். 18 வயசுக்கு பின்னர் வேலைக்கு போயிடுவேன் என்று அப்பாவிடம் நான் கூறியதும் அப்பா அதற்கு ஏன் அப்படி சொல்கிறாய் என்று கேட்டார். நான் ஸ்கூல் ட்ராப் அவுட் ஆகிவிட்டு, பத்தாவது ஃபெயில் ஆகிவிட்டேன். திரும்ப எழுதினேன் அதிலும் பெயில் ஆகிவிட்டேன். சிலருக்கு படிப்பு பிடிக்காது என்பதில் தப்பு இல்லை.

டான்ஸ் கிளாஸ் போய்க்கொண்டிருந்த போது கால் உடைந்து அறுவை சிகிச்சை செய்து ஆறு மாதம் ரெஸ்ட்டில் இருந்தேன். அம்மா நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்ததார் பள்ளியில் படிக்கவில்லை அம்மாவுக்கு ஸ்கூல் என்பது சினிமா இண்டஸ்ட்ரி தான். அதனால், அம்மா என்னை புரிந்து கொண்டார். பின் சம்பாதிக்க ஆரம்பித்து பதினெட்டு வயதில் இருந்து சொந்தக்காலில் நிற்கிறேன். பெற்றோரிடம் பணம் கேட்பதில்லை. நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

kamals-daughter-akshara-haasan-open-talk-sarika

சிறு வயதிலிருந்து, அதை புரிந்து கொண்டு அதன்படி நடந்து வருகிறேன். என் அப்பா அம்மா தனியாக பிரியும்போது ஒரு குழந்தையாக என் மனதில் அது மிகவும் பாதித்தது. ஏனென்றால், நான் நடிகரின் மகளாக இருக்கலாம். ஆனால், நாங்களும் மனிதர்கள் தானே மனதை பாதிக்க தானே செய்யும். ஹோட்டலுக்கு, ஒருமுறை சென்றபோது என் குடும்பத்தாரை யாரோ ஒருத்தர் கிண்டல் செய்தார். அப்படியே, நான் அவர் மேல் பாயப் போய்விட்டேன். அக்கா தான் என்னை அடக்கி நம் குடும்பத்தின் மானத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

நானும், அக்காவும் மும்பையில் தான் இருக்கிறோம். சென்னையை போல் மும்பை கிடையாது. சென்னை வட்ட வடிவம் மும்பை நீளமான நகரம் இரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மிகவும் கஷ்டம். என்னைவிட, அக்கா 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறார் என்று நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

Share this post