பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ? வெளியான சூப்பர் தகவல் !

Kamalhaasan to be part of ponniyin selvan movie

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

படத்தின் சிறப்பு சப்தம், பின்னனி ஓசைகள் (Foley), ரீ ரெக்கார்டிங் ஆகியவை நுங்கம்பாக்கம் ரிவர் ரெக்கார்ட்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

இதற்கிடையில், படத்தின் டீசர் வெளியீட்டிற்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு உலக சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் டீசர் வெளியிடப்படும் என சமீபத்திய தகவல்கள் வெளியானது. பின்னர் அது கைவிடப்பட்டது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதே நேரத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த வாரம், பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டது. அதன்படி அப்படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘வருகிறான் சோழன்’ என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், முக்கிய அப்டேட் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

அதனைத் தொடர்ந்து, முக்கிய கதாபாத்திரங்களின் பெயருடன் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

இப்படத்தின் டீசருக்காக தான், திரையுலகமே காத்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இதில் பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

பொன்னியின் செல்வன் இந்தி ரீசரை அமிதாப் பச்சனும், மலையாளம் ரீசரை மோகன்லாலும், தெலுங்கு டீசரை மகேஷ்பாபு, கன்னடம் டீசரை ரக்ஷித் ஷெட்டியும் மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர். ஆனால், டீசர் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் லீக் ஆகி வீடியோ வைரல் ஆனது. அதனை தொடர்ந்து, அறிவித்தபடி படத்தின் பிரம்மிக்க வைக்கும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய பகுதியில் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamalhaasan to be part of ponniyin selvan movie

பொன்னியின் செல்வன் படத்தில் கதை பகுதியை விளக்கி பேசியுள்ளார். மேலும் இதற்கான டப்பிங்கை கமல் முடித்து விட்டதாகவும், பொன்னியின் செல்வன் படத்திற்கு கமல் ஒரு பலத்தை கூட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

Share this post