கமல்ஹாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. தீயாய் பரவும் தகவல்!
களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.
4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். 350 கோடிகளை கடந்து வசூல் பெற்றது.
இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் KH233 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமல்ஹாசனுக்கு தீடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பியுள்ளார். ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் எனவும் சொல்லப்படுகிறது.