பிக் பாஸில் இருந்து விலகல்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க; ட்ரோல்களுக்கு பயந்த கமல்?..

Kamal quit Bigg Boss

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக் பாஸ் 7 சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை காண அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது, பிக் பாஸில் இருந்து விலகுவதாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kamal quit Bigg Boss

அதில், ஏழு சீசன்களாக தனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றும், இந்த வாய்ப்பு விஜய் டிவி வழங்கியதற்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார். அவருடைய சினிமாவில் இருக்கும் மற்ற கமிட்மெண்ட்ஸ்களால் இந்த நிகழ்ச்சியை தொடர முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம்.

அதனால், இந்த சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என கமல் தெரிவித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 7 ம் சீசனில் கமலின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனதே இதற்கு காரணம் என்று கூறி வருகிறார்கள்.

Share this post