'இங்க விடியலை முடிவு பண்றதே நான் தான்' உதயநிதி முன் அரசியல் பேசிய கமல்.. வைரலாகும் வீடியோ !

Kamal haasan vikram movie trailer dialogue indirect hits udhanidhi stalin dialogue getting viral

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Kamal haasan vikram movie trailer dialogue indirect hits udhanidhi stalin dialogue getting viral

இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் கமல் ஹாசன், சிம்பு, அனிருத், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் என பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இப்படத்தில் பத்தல பத்தல பாடல் கமல் ஹாசன் அவர்கள் வரிகள் மற்றும் குரலில் வெளியானது. அதில் ஒரு சில வரிகள் அரசியல் சார்ந்து இருப்பதை சுட்டிக்காட்டி நிறைய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வீடியோவில் இடம்பெற்றுள்ள டயலாக் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இந்த விழாவில் விக்ரம் படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. அதில் இடம்பெற்ற விடியல் டயலாக் உதயநிதி அவர்களை ஜெர்க் ஆகிவிட்டது என பேசப்பட்டு வருகிறது. ட்ரைலர் வீடியோவில், ‘இங்க யாரு.. எப்ப விடியலை பாக்கப்போறாங்குறத முடிவு பண்றதே நான் தான்’ என ஒரு டயலாக் இடம்பெற்றுள்ளது.

Kamal haasan vikram movie trailer dialogue indirect hits udhanidhi stalin dialogue getting viral

இது திமுகவுக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ‘விடியல்’ ஆட்சி தரப்போவதாக கூறி பிரச்சாரம் செய்தனர். தற்போது அதைப்பற்றி கமல் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this post