இதெல்லாம் தான் சென்சாரில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம் படத்தின் முக்கிய காட்சிகள் !

Kamal haasan vikram movie censor scenes list has been released on social media

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். 1986ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் அப்படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான அப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.

Kamal haasan vikram movie censor scenes list has been released on social media

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து, கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Kamal haasan vikram movie censor scenes list has been released on social media

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Kamal haasan vikram movie censor scenes list has been released on social media

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் ஆக மாறிவிட்டது.

இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

Kamal haasan vikram movie censor scenes list has been released on social media

இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

Kamal haasan vikram movie censor scenes list has been released on social media

மூன்று டாப் நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு UA சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது விக்ரம் படத்தில் இருந்து சென்சார் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், இப்படத்தில் இருந்து சில வார்த்தைகள், சில காட்சிகளை நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

Kamal haasan vikram movie censor scenes list has been released on social media

Share this post