வெந்து தணிந்தது காடு படத்தில் கமல்ஹாசன்.. யாரும் எதிர்பார்த்திராத ட்விஸ்ட் சீன்.. வைரலாகும் போட்டோ !
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். வெந்து தணிந்தது காடு படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான இந்த படத்திற்காக சிம்பு கடுமையாக உழைத்து உள்ளார் என கூறப்படுகிறது. தனது உடல் எடையை வெகுவாக குறைத்து சிம்புவின் Transformation ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு பல ஆண்டு இடைவெளியில் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார்.
இப்படம் முதல் கலெக்ஷன் சிம்புவின் திரைப்பயணத்தில் சாதனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கமல்ஹாசன் அவர்களை காட்டுவதும், அவரது படத்தின் reference வைத்திருப்பது செம ட்விஸ்ட். படத்தின் கிளைமாக்ஸில் கமலின் நாயகன் பட வேலு நாயக்கர் புகைப்படத்தை வைத்திருப்பார்கள்.
அதுமட்டுமின்றி நாயகன் படத்தில் ஐயர் கதாபாத்திரத்தில் வரும் டெல்லி கணேஷ் இப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் வருகிறார். அந்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.