இனி ரஜினி - கமல் கூட்டணி நிச்சயம் நடக்காது.. பளீச்சென சொன்ன உலகநாயகன்..!

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இவரது யதார்த்தம், குணம், சாந்தம் என அனைத்து பண்புகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருபவர்.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

தற்போது, ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் தலைவர்169 படத்தில் நடிக்க இருக்கிறார். ஷூட்டிங் பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது விஜய் - அஜித் போல, 80ஸ் & 90ஸ் களில் ரஜினி - கமல் திரைப்படம் வந்தாலே அவர்கள் ரசிகர்கள் கொண்டாட்டமாகி விடுவர்.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

‘விக்ரம்’ படத்திற்கான ப்ரோமோஷன் விழாவில் நடிகர் தனது வாழ்க்கை மற்றும் திரைப்படத் துறை பயணம் பற்றி பலரும் அறியாத பல விஷயங்களை பற்றி பேசினார்.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

அந்த வகையில், டிஜிட்டல் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கமல், ரஜினிகாந்தும் தானும் கடந்த 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ஏன் இணைந்து நடித்ததில்லை என்பதை பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மீண்டும் நடிப்பது குறித்து கேள்வி கேட்ட போது, ஆரம்பத்தில் இருவரும் இணைந்து நடித்ததாகவும், பின்னர் ஒன்றாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்ததாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதோடு 2 சூப்பர் ஸ்டார்களின் கூட்டணி வெற்றியை உருவாக்காது என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

Kamal haasan says about rajini kamal combo in film hereafter

கமல் - ரஜினி இருவரும் 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுது, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் செம ஹிட் அடித்தது. மேலும், இதில் சில படங்களில் ரஜினி வில்லனாகவே தோன்றி இருப்பார்.

Share this post