Mass update video: 'ஆரம்பிக்கலாமா.. சூர்யாவும் நானும் இணையும் படலத்தை முழுசும் காட்டிடலாம்னு இருக்கேன்..' கமலின் மாஸ் அப்டேட்

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இயக்குனர். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

இப்படத்தில், கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய பாகத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

கமலின் வளர்ப்பு மகனான காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ். காளிதாஸ், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கண்டுபிடிக்கிறார். இதையடுத்த முகமுடி கும்பல் ஒன்று காளிதாஸை கொலை செய்ய, இதனைத் தொடர்ந்து சில போலீஸ்காரர்களை அந்த முகமுடி கும்பல் கொலை செய்கிறது. கமலும் அந்த கும்பலால் கொலை செய்யப்படுவது போல் காட்டுகின்றனர்.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

அந்த முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக நியமிக்கப்படுவது பகத் பாசில். இந்த தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் பகத் பாசிலுக்கு கிடைக்கிறது. வரிசையாக போலீசை மட்டும் குறி வைத்து கொல்லும் அந்த முகமுடி கும்பல், போலீஸ் அல்லாத கமலை ஏன் கொலை செய்தனர் என விசாரிக்கும் போது தான் செம்ம ட்விஸ்ட் வெளியாகிறது.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

இறுதியில் அந்த முகமுடி கும்பல் யார் என்பதை பகத் பாசில் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் தான் இந்த விக்ரம்.

படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

சீக்ரெட் ஏனெண்டாக பகத் பாசில் கவனத்தை ஈர்க்கிறார். முதல் பாதி முழுக்க பகத் பாசில் தான் ஹீரோ. போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா . படத்தின் இறுதியில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களுக்கு லீடு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் லோகேஷ்.

விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

இந்நிலையில், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு வாழ்த்து கூறி தன் கைப்பட எழுதிய கடிதத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது, கமல்ஹாசன் அவர்கள் மக்களுக்கு நன்றி கூறும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ள தகவலையும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

“தரமான திரைப்படங்களை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான, தரமான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும், விக்ரம் படத்தையும் ரசிகர்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். அனிருத், கிரீஷ், எடிட்டர் பிலோமின், அன்பறிவு, சதீஷ்குமார் தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தம்பிகள் விஜய் சேதுபதி, பகத் பாசில் நரேன், செம்பன் வினோத் என வீரியம் மிக்க நடிகர் படை வெற்றியின் முக்கிய காரணங்கள். கடைசி 3 நிமிடம் மட்டுமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்.

Kamal haasan says about pairing with suriya in upcoming film kamal haasan thanking fans for vikram success viral video

இயக்குனர் லோகேஷுக்கு சினிமா பாலும், என்மேலும் இருக்கும் அன்பு படப்பிடிப்புன் ஒவ்வொரு நாளிலும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது” என கமல் வீடியோவில் பேசி இருந்தார்.

இதன் மூலம் விரைவில் விக்ரம் 3 ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம் அல்லது சூர்யா மற்றும் கமல் இணைந்து படம் நடிக்கலாம் என நெட்டிசன்கள் தகவல்கள் வெளியிட்டு வருகின்றனர்.

Share this post