விஜய் - சூர்யா - கமல் கூட்டணி ? அவங்களும் ஓகே சொல்லிட்டாங்களா.. செம சர்ப்ரைஸ் அப்டேட் Waiting !

Kamal haasan rajkamal productions to produce vijay and surya films

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். 1986ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் அப்படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான அப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.

Kamal haasan rajkamal productions to produce vijay and surya films

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து, கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Kamal haasan rajkamal productions to produce vijay and surya films

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Kamal haasan rajkamal productions to produce vijay and surya films

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் ஆக மாறிவிட்டது.

இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

Kamal haasan rajkamal productions to produce vijay and surya films

இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

Kamal haasan rajkamal productions to produce vijay and surya films

கமல் தற்போது பல நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். தற்போது, வெளியாகவுள்ள விக்ரம் படத்திற்கும் இவரது தயாரிப்பு நிறுவனம் தான். சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கின்றார்.

அதோடு, விஜய் மற்றும் சூர்யாவிடமும் இதுக்குறித்து கமல் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் இருவருமே ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கமல் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம், வரும் நாட்களில் பல சர்ப்ரைஸ் அறிவிப்புக்களை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kamal haasan rajkamal productions to produce vijay and surya films

Share this post