விஜய் & அஜித்தை தாக்கி பேசினாரா கமல் ? 'அப்டி பிச்சை எடுக்கமாட்டேனு' யார சொன்னாரு ? Viral Video
களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர். 4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.
கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 300 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.
இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 2 ;மாதங்கள் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில், சமீபத்தில் கமலஹாசன் அவர்கள் பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் அவர், உழைப்பின்றி ஊதியம் இல்லை. நடனம் ஆடிய பின் எனக்கு கால் வலிக்குது என்று சொல்லமாட்டேன். என்னுடைய நடனம் தான் ரசிகர்களிடம் பேச வேண்டும். எனக்கு காலில் ராடு வைத்திருந்தார்கள் என்று சொல்லி, காலை காண்பித்து பிச்சை எடுக்க மாட்டேன். என் திறமையை காண்பித்து தான் சம்பாதிப்பேன் என்று கூறியிருந்தார்.
இப்படி கமல் கூறிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. அஜீத்திற்கு பல ஆபரேஷன் செய்திருப்பது, அவருக்கு கால் மற்றும் முதுகில் பிரச்சனை இருப்பது குறித்து தான் அவர் இப்டி பேசியிருக்கிறார் என அஜித் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். கமல் மறைமுகமாக அஜித்தை தாக்கிப் பேசி இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
ஏற்கனவே, விக்ரம் படத்திற்காக கமல் அளித்த பேட்டியில், பத்தல பத்தல பாடலுக்கு காலில் 2 முறை அறுவை சிகிச்சை செய்து இருந்தும், அதிலே நடனம் ஆடினேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றெல்லாம் கமல் கூறி இருந்தார். அந்த வீடியோவை தற்போது எடுத்து போட்டு எதுக்கு மாத்தி மாத்தி பேசறீங்க என்று கமலை கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.
கமலின் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து அஜித்தை கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கமல், விஜய் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘நான் அவர் படமெல்லாம் பாத்து இருக்கிறேன், ஆனால், நல்ல படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. எல்லா நடிகர்களும் ஒரு நல்ல படம் பண்ணனும் என்பது என் ஆசை. தம்பி விஜய்யும் நல்ல படம் பண்ணனும்’ என்று பேசி இருக்கிறார். அதற்கு இதுவரைக்கும் அவர் நல்ல படமே நடிச்சது இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
1) Kamal is insecure seeing AK's dedication towards stunts & in action setpieces , inspite AK performing with injury .
— Vicky ⚡ (@TFB_VK) August 5, 2022
2) AK movie - Vedalam thrashed Thoongavanam at Boxoffice & critically aswell .
3) Kamal should have gratitude towards AK for introducing her daughter,Akshara https://t.co/bGLr7SJNLD
Indha vechiko😂 pic.twitter.com/kpKxAK75ab
— Abhishek Rj (@ABHISHEK15raja) August 5, 2022
சக நண்பர் விஜய் தாக்கப்பட்டாரா இல்லை கமலால் *க்கப் பட்டார்#AK61 pic.twitter.com/P0abEYcsI8
— Kαииαи Kя (@krrkannan94) August 6, 2022
Difference between ajith and pendavan kamal#AK61
— HBD Sathyadev Vk Fanboy (@sankartweep) August 5, 2022
pic.twitter.com/yo2ltoo7oR