சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்.. கண்கலங்கி கமலை கட்டியணைத்த சிவகுமார்.. வைரலாகும் போட்டோஸ் !

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிடுவது, சோட்டா பீமில் பீம் லட்டு சாப்பிடும் போது உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சா எடுத்துக்கொண்ட உடன் அசுர பலம் பெறும் காட்சிகள் அல்டிமேட்.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

ரோலெக்ஸ் கதாபாத்திரம் குறித்து சூர்யா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் நடித்தது கனவு நனவானது போல் இருந்தது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸுக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

கமல்ஹாசன் லோகேஷுக்கு கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ், ‘லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர். இந்த கடிதத்தை படிக்கும்போது எவ்வளவு எமோஷனல் ஆனேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது நன்றி ஆண்டவரே’ என பதிவிட்டு அந்த கடிதத்தினை ஷேர் செய்துள்ளார்.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

ரிலீஸ் ஆகி ஒரு சில நாட்களிலேயே நல்ல வசூல் வேட்டையிலும், மக்கள் வரவேற்பில் டாப் இடம் பிடித்திருக்கும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார் உலகநாயகன்.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

தற்போது, சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் அவர்கள் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் பரிசளித்துள்ளார். இதன் புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

Kamal haasan gifts rolex watch for suriya for vikram movie character

Share this post