மியூசிக் போடாமல் எப்படி சாத்தியம்…? மிரண்டுப்போன கமல் "கொட்டுக்காளி" படக்குழுவுக்கு பாராட்டு!

kamal-haasan-appreciate-kottukkaali-movie-team

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் என்ற இடத்தைப் பிடித்தவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு எண்ணிக்கை விட அதிகமாக பரோட்டா சாப்பிட்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த காமெடி நடிகராக இடத்தைப் பிடித்தார் .

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் விஷால், விஜய், அஜித் என பல சூப்பர் ஹிட் ஹீரோக்களின் படங்களுடன் நடித்து பிரபலமான காமெடி நடிகராக பலம் வந்தார். இதனிடையே அவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

kamal-haasan-appreciate-kottukkaali-movie-team

இந்த நிலையில் தற்போது மீண்டும் சூரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “கொட்டுக்காளி” பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. கிராம பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லை. மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. படத்தில் லைவ் சவுண்ட் முறை பின்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்தை பார்த்த கமல் மூன்று பக்கங்களுக்கு படத்தை குறித்து பாராட்டுக்கள் எழுதி இருந்தார்.

kamal-haasan-appreciate-kottukkaali-movie-team

இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி “ ஜமாகவே சினிமா ஒரு தனி மொழி. அது உங்களுக்கு வருது. அதனால நீங்க எப்போதும் விட்டுவிடக்கூடாது. அத செய்யனும்னு தோணுதுனா உங்களுக்கு தனி பாராட்டு. ரொம்ப நல்லா இருக்கு. சில முடிவுகள் எப்படி எடுத்தீங்கனு தெரியல. மியூசிக் போடாம இருந்தது எல்லாம் சரியான முடிவு” எனக் கூறியுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this post