முதல் நாளே ஜி.பி. முத்துவால் கடுப்பான கமல்.. அப்டி என்ன கேட்டாரு பாருங்க.. படுவைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், சின்னத்திரை நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, சூப்பர் மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலெட்சுமி, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி,சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின் போது நடந்த ஒரு காமெடி தான் வீடியோவாக வைரலாகி வருகிறது. முதல் ஆளாக உள்ளே சென்ற ஜி.பி. முத்து, சில நேரம் தனியாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். தனியாக இருந்தால் தனக்கு மிகவும் பயம் என்று அவர் கூற அதை ரசிகர்கள் நகைச்சுவையாக ரசித்தனர்.
இதன்பின், ஜி.பி முத்துவிடம் பேசிய கமல், technical கோளாறு காரணமாக நாளை தான் அனைவரும் வருவார்கள், இன்று நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதனால் பதற்றமடைந்த ஜி.பி.முத்து, என்னால் தனியாக இருக்க முடியாது, யாரையாவது அனுப்புங்கள் என்று கமலிடம் கூற, கமல் பல விதத்தில் ஜி.பி.முத்துவை கலாய்த்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, ஆதாம், ஏவாள் குறித்து உதாரணம் கூறிய கமல், ஏவாள் வரவரைக்கும் ஆதாம் காத்திருந்தது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்க என்று கமல் கூறினார். இதற்க்கு ஜி.பி.முத்து, ஆதாமா அது யாரு? என்று கேட்க சற்று கமல் ஷாக் ஆகிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
GP Muthu | Bigg Boss House 🏠 #BiggBossTamil6 #biggboss6 #gpmuthu #gpmuthubiggboss #BiggBossTamil 😂😂😂😂😂😂 pic.twitter.com/1pXjf3Fx4h
— A.Purushothaman (@purushothamanAM) October 10, 2022