பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பப்ளிக்காக வெளியிட்ட காளிதாஸ் ஜெயராம்.. வைரல் போட்டோ இதோ !
பிரபல நடிகரான ஜெயராம், பல மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
தனது ஏழு வயதில் மலையாள திரைப்படமான கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருது முதல் பல விருதுகளை வென்றுள்ளார்.
2016ம் ஆண்டு மீன்குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில் புத்தம் புது காலை, பாவ கதைகள், ஒரு பக்க கதை, விக்ரம், நட்சத்திரங்கள் நகர்கிறது உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரங்கள் பெரிதும் பேசும் படியாக தான் அமைந்துள்ளது.
சோசியல் மீடியாவிலும் பிஸியாக இருக்கும் காளிதாஸ் ஜெயராம், அவ்வப்போது தனது பெற்றோர்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில் தனது குடும்பம் அல்லாமல் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.
இதனால் பல கேள்விகள் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது. அவர் பெயர் தாரணி காளிங்கராயர். 2019 மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர். அவருடன் டேட்டிங் செய்வதை காளிதாஸ் ஜெயராம் உறுதி செய்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.