பரபரப்பு காட்சிகளோடு வெளியான 'கலகத் தலைவன்' ட்ரைலர்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகன், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியல் மட்டுமல்லாது சினிமா துறையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். சினிமா தயாரிப்பாளர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் ஆக இருந்த உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெயரில் குருவி, ஆதவன், மன்மதன் அம்பு போன்ற படங்களை தந்துள்ளது.
மேலும், முழு காமெடி திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
தற்போது, கண்ணை நம்பாதே, மாமன்னன் போன்றவற்றில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மனைவி கிருத்திகா டைரக்ஷனில் ஒரு படம் நடிக்க உதயநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நடிப்பில் தயாராகி உள்ள ‘கலகத் தலைவன்’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படத்தை மீகாமீன், தடையறத் தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால், வில்லனாக பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கரோலி ஆகியோர் இசையமைத்து உள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 18ம் தேதி வெளியாக உள்ள ‘கலகத் தலைவன்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜர்னரில் உருவாகியுள்ளது.