"'இந்தியன் 2' படத்தில் நானும் இருக்கேன்".. ரசிகர்களுக்கு பதில் சொன்ன நடிகை !

Kajal agarwal to be part of indian 2 movie information getting viral on social media

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தியன் - 2 படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், என்ன நேரமோ தெரியவில்லை படம் தொடங்கிய நாள் முதல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆக்சிடென்ட் என தொடங்கி பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது.

Kajal agarwal to be part of indian 2 movie information getting viral on social media

முதலில் படத்தில் கமல்ஹாசன் அவர்களின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.

Kajal agarwal to be part of indian 2 movie information getting viral on social media

தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமான காரணத்தால், கமல்ஹாசன் விக்ரம் மற்றும் சங்கர் தெலுங்கு படத்திற்கும் சென்றுவிட்டார். இதனால் இந்தியன் - 2 ஷூட்டிங் நடைபெறாமல் இழுபறியில் இருந்து வந்தது. அனைத்து பிரச்னைகளும் முடிந்து படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில், கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருந்த நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமானதை தொடர்ந்து படத்தில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்பட்டது.

Kajal agarwal to be part of indian 2 movie information getting viral on social media

அவருக்கு பதில் சமந்தா, தமன்னா, ஸ்ரேயா, தீபிகா படுகோனே என பல நடிகைகள் பெயர் இணையத்தில் உலா வந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என முன்பே பேசப்பட்டு இருந்தது. இதற்காக கமல்ஹாசனும் அமெரிக்கா சென்று உடல் எடையை சரி செய்து படத்தில் இணைவார் என சொல்லப்பட்டது.

Kajal agarwal to be part of indian 2 movie information getting viral on social media

மறுபக்கம் இயக்குனர் ஷங்கரும், சீக்கிரமே RC15 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியன் 2 படத்தை எடுக்க உள்ளார் என சொல்லப்பட்டது. இந்த படத்தில் ஆரம்பத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் படத்தில் இருந்து விலகி உள்ளனர்.

Kajal agarwal to be part of indian 2 movie information getting viral on social media

மேலும், விவேக், நெடுமுடி வேணு ஆகியோர்கள் உயிரிழந்தனர். காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இப்படி இருக்கின்ற நிலையில் காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

Kajal agarwal to be part of indian 2 movie information getting viral on social media

அப்போது, சில ரசிகர்கள் நீங்கள் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறீர்களா? இல்லையா? என கேட்டுள்ளனர். அதற்கு காஜல் அகர்வால் யார் சொன்னது அதுபோன்ற செய்திகளை நானும் கேட்டேன். அது எல்லாம் வதந்தி. நான் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதி. படத்தின் சூட்டிங் செப்டம்பர் 13ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது என அடித்து கூறி உள்ளார்.

Share this post