'கைதி'லேயே 'விக்ரம்' படத்திற்கான Lead கொடுத்த லோகி.. வைரலாகும் கைதி பட சீன் வீடியோ !

Kaithi movie scene has been considered to be the lead for vikram movie

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Kaithi movie scene has been considered to be the lead for vikram movie

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இருந்து கடந்த வாரம் ரிலீசான ‘பத்தல பத்தல’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், தற்போது அதில் இருந்த இன்னொரு விபரத்தை கண்டுபிடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

இப்படி ஒரு நிலையில் கைதி படத்தின் ஒரு காட்சியில் நரேன் “ghost” எங்கே என்று கேட்பார். அதே சமயம், தற்போது விக்ரம் பட ட்ரைலரில் Once Lived The Ghost என்ற வசனத்தை ஒப்பிட்டு கைதி படத்திலேயே விக்ரம் படத்திற்காக லீடை லோகேஷ் கனகராஜ் கொடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது நெட்டிசன்கள் கைதி , விக்ரம் படத்தை ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். கைதி படத்தில் இருந்து ஒரு பகுதியாக கதை எடுக்கப்பட்டுள்ளதா என பல வித கோணங்களில் ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Share this post