திடீரென தீயாய் பரவும் 'கைதி 2' போஸ்டர்.. வெறித்தனமான லுக்கில் சூர்யா - கார்த்தி.. இதோ பாருங்க !

kaithi 2 suriya and karthi poster getting viral on social media

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

kaithi 2 suriya and karthi poster getting viral on social media

கைதி, தம்பி, சுல்தான், விருமன் திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது, வந்திய தேவனாக இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இவருக்கு நல்ல புகழை பெற்று தந்துள்ளது. சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

kaithi 2 suriya and karthi poster getting viral on social media

விரைவில், கைதி 2 குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து ஒரு முறை அவரிடம் கேட்ட போது, கைதி 2 அடுத்த வருடம் பிளான் செய்துள்ளோம். அதுவும், லோகேஷ் விஜய் சாரோட படத்தை முடித்த பிறகு என்று கூறியுள்ளார். மேலும், அவரே, டில்லி - ரோலெக்ஸ் பத்தி கேக்காதீங்க நிஜமா எனக்கு தெரியாது என கூறியிருந்தார்.

kaithi 2 suriya and karthi poster getting viral on social media

கைதி 2வில் ரோலெக்ஸ் - டில்லி அதாவது கார்த்தி - சூர்யா காம்போ இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது கார்த்தி - சூர்யா இருவரும் வெறித்தனமான லுக்கில் இருக்கும் கைதி 2 படத்தின் பேன் மேட் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

kaithi 2 suriya and karthi poster getting viral on social media

Share this post