பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் காவ்யா? இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடக்கவில்லை, ஆனால் சிலர் இறந்து போக அதனால் வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடித்தனர். குமரேசன் மாமா என்ற வேடத்தில் நடித்து வந்த நெல்லை சிவா அவர்கள் உயிரிழந்த நிலையில், குமரேசன் ரோலில் திரைப்படங்களில் நடித்த நடிகர் நடித்து வருகிறார்.

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

இதற்கு முன்னரே, விஜே சித்ரா தற்கொலையை தொடர்ந்து, அவருக்கு பதில் அவர் சாயலில் இருக்கும் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். தற்போது இவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இதன் மூலம் இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளது.

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

தற்போது, முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாக்கு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவரும் சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது. கால்ஷீட் சரியாக கிடைக்காததால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில், பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் இவருடன் நடித்து வரும் சக நடிகர்கள் உடன் எடுத்த போட்டோ பதிவிட்டு மிஸ் யூ ஆல் என பதிவிட்டுள்ளார். இதனால் விரைவில் இவர் சீரியல் தொடரில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

kaavya arivumani to replace soon in pandian stores serial post getting viral

Share this post