குஷி டூ பாகுபலி.. டாப் 10 மூவிஸை மிக்ஸ் செய்த விக்கி.. சிரிச்சு சிரிச்சு முடில.. காத்துவாக்குல ரெண்டு காதல் ட்ரைலர் !

Kaathuvaakula rendu kadhal trailer goes viral on youtube and trending on social media

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Kaathuvaakula rendu kadhal trailer goes viral on youtube and trending on social media

இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது. அவ்வப்போது இதன் ஷூட்டிங் போட்டோஸ் மற்றும் வீடீயோஸ் வெளியாகி வைரல் ஆகி வந்தது.

Kaathuvaakula rendu kadhal trailer goes viral on youtube and trending on social media

இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Kaathuvaakula rendu kadhal trailer goes viral on youtube and trending on social media

இந்நிலையில், படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி செம வைரல் ஆகி வருகிறது. விஜயின் குஷி பட பாணியில் விளக்கை அணையாமல் காப்பதற்கு நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என மூவரும் கை சேர்க்கின்றனர்.

Kaathuvaakula rendu kadhal trailer goes viral on youtube and trending on social media

ஒரு கட்டத்தில் முக்கோண காதல் விவகாரம் தெரிய வருகிறது. விஜய் சேதுபதி, இரு பிள்ளைகளுக்கு தாயான கண்மணியை கரம் பிடிப்பாரா? அல்லது டிஸ்க்கோ, பார் என சுற்றும் மாடர்ன் கதீஜாவை ஏற்பாரா? என்பதே மீதி கதை ஆனால் இருவரையும் விட்டு விலகி முரட்டு சிங்குளாகவே விஜய் சேதுபதி இருப்பார் என முன்னதாக தகவல் கசிந்தது.

Share this post