‘தம் அடிக்காதீங்க’ - அட்வைஸ் செய்த ரசிகருக்கு உதாரணம் சொன்ன காஜல்.. வைரலாகும் பதிவு !

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கல் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ்.
இப்படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு2, போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார். தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். மேலும், அவரது குடும்பத்தினரிடம் கூட நல்ல நட்பு பாராட்டி வருகிறார் காஜல்.
சமூக வலைத்தகளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதுவும் கடந்த சில தினங்களாக தன்னுடைய பழைய முகநூல் பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் காஜல். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காஜல் பசுபதி புகைபிடிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு பல விதமாக நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்தது.
அதற்கு பதிலளித்த காஜல், ”என்னுடைய தந்தை எந்த பேரை கெட்ட பழக்கம் இல்லாதவர் ஆனால் அவருக்கு புற்றுநோய் வந்து மிக சீக்கிரத்தில் இறந்து புற்றுநோய் அப்படியே போனாலும் சந்தோஷம்தான் என்று பதில் அளித்திருக்கிறார். அதே போல புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கும் காஜல், ‘நான் புகைபிடிப்பேன். அது யாரையாவது தொல்லை செய்தால் நாம் வாழும் உலகை ஒரு முறை சுற்றிப் பார்க்கச் சொல்வேன்.
சிலர் இதனை திமிர் என்று சொல்லலாம். ஆனால், இதை நான் உண்மையாக இருப்பது என்று தான் சொல்வேன், நான் என்னை நானே ஏமாற்றிக்கொண்டு போலித்தனமாக நடித்து என்ன கிடைக்கும் பல நண்பர்களை விட நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்ளும் ஒரு நபர் எனக்கு நண்பராக இருந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன்’ என்று பதிவிட்டு இருக்கிறார் காஜல்.