"கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்.." - இணையத்தில் வைரலாகும் ஜோதிகா பதிவு

jyothika post about completion of movie getting viral on social media

நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

jyothika post about completion of movie getting viral on social media

2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.

jyothika post about completion of movie getting viral on social media

திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் நடித்தார்.

jyothika post about completion of movie getting viral on social media

சுமார் 25 வருடங்கள் கழித்து ஸ்ரீ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம். அந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஜோதிகா நடிப்பதற்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. jyothika post about completion of movie getting viral on social media

எனவே ஜோதிகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கனத்த இதயத்துடன் ஶ்ரீ படத்தில் எனது பகுதிகளை முடித்துவிட்டு அவர்களிடம் இருந்து விடைப் பெறுகிறேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

jyothika post about completion of movie getting viral on social media

Share this post