'தைரியம் இருந்தா ஒரிஜினல் போட்டோ வெச்சு கமெண்ட் போடுடா..யாரா இருந்தாலும் சரி' லைவ்வில் விளாசிய ஜூலி ! வைரலாகும் வீடியோ

Julie warns who made bad comments on her live video getting viral

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலம் அடைந்த ஒருவர் ஜூலி. வீர தமிழச்சி என பெயரை பெற்ற இவர், சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரல் ஆகி, சாதாரண பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பேசும் அளவிற்கு ஒருவராக மாறினார்.

இதன் மூலம், கிடைத்த பிரபலத்தினால் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அந்த நிகழ்ச்சியில், இவரது பெயர் மொத்தமாக அடிபட்டு பல நெகடிவ் இமேஜ்களை பெற்றார்.

Julie warns who made bad comments on her live video getting viral

அதன் பின்னர், அந்த நெகட்டிவ் விமர்சனங்களை மாத்த நிறைய நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் பங்கேற்று வந்தார். மேலும், சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் பிசியாக போட்டோஸ், வீடியோ என பதிவிட்டு வந்த ஜூலி, BB ஜோடிகள் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Julie warns who made bad comments on her live video getting viral

அதனைத் தொடர்ந்து, BB அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்து தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்தார். ஜூலி டாப் 3 இடங்களில் ஒன்றை பிடிக்கவேண்டும் என்று மக்கள் ஆசைப்படும் அளவிற்கு மக்கள் மனதை வென்றார்.

Julie warns who made bad comments on her live video getting viral

தற்போது, திடீரென தனது சிகிச்சை நடந்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு செம வைரல் ஆனது.

கண் பார்வை பிரச்சனைக்கு லேசர் சிகிச்சை செய்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், லைவ் வந்த ஜூலி, ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறி வந்தார். அப்போது, பாசிட்டிவ் ஆக பேசி வந்த ஜூலி, தனது ரசிகர்களுக்கு ஆன்சர் செய்து வந்தார்.

சிலர் கேலி செய்யும் விதமாக, கமெண்ட் செய்யவே, ‘மோசமா கமெண்ட் செய்றவங்க உங்க ஒரிஜினல் பேஸ் போட்டோ வைங்க.. அதுக்கு தைரியம் இருக்கா’ என செம போல்ட் ஆக பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this post