'நம்ம கெத்தா வால்லாட்டனுமா..' ரியாலிட்டி ஷோவில் பிகில் 'வெறித்தனம்' பாடலை பாடிய நடுவர்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

Judge sung wrong lyrics for verithanam song which is getting viral on social media

சினிமாவிற்கு இணையாக சின்னத்திரையில் என்ன நடந்தாலும் நமது நெட்டிசன்கள் பாராபட்சம் பார்க்காது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில், கடந்த மார்ச் 12ம் தேதி, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் ஸ்டேஜ் தமிழ்.

Judge sung wrong lyrics for verithanam song which is getting viral on social media

புதிய திறமையாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், இளைஞர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை அஹிலா (ராகா) மற்றும் விக்கி ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Judge sung wrong lyrics for verithanam song which is getting viral on social media

இந்நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்கள் களம் இறங்கி, அவர்கள் இடையேயான கடுமையான போட்டி ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை டாக்டர் பர்ன் மற்றும் புனிதா ராஜா, முன்னாள் ராகாவின் அறிவிப்பாளர் மற்றும் கலைஞர், ராம் மற்றும் இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 30,000, இரண்டாம் பரிசு 15,000, ஆறுதல் பரிசாக ஒவ்வொருவருக்கும் 5000 கொடுக்கப்படுகிறது.

Judge sung wrong lyrics for verithanam song which is getting viral on social media

இப்படி வித்தியாசமான கான்செப்ட்டில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர் புனிதா ராஜாவை குறித்து சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் விஜயின் பிகில் படத்தில் வரும் வெறித்தனம் பாடலை பாடியிருந்தார். அப்போது, அவர் பாடியது சரியாக இல்லை என கூறி, இவர் பாடவே, புனிதா லிரிக்ஸ் தவறாக பாடியிருந்தார்.

Judge sung wrong lyrics for verithanam song which is getting viral on social media

நீங்கள் நோட் சரியாக பாடவில்லை என சொல்லி இருக்கிறார். இதை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள், உங்களுக்கு பாட தெரியவில்லை போட்டியாளர்களை குறை சொல்கிறீர்களா? இந்த மாதிரி இருப்பவர்கள் மத்தியில் திறமையாளர்கள் எப்படி வளர முடியும்? என பயங்கரமாக பேசி இருக்கின்றனர்.

Judge sung wrong lyrics for verithanam song which is getting viral on social media

இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுக்க புனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இப்போது சோஷியல் மீடியாவில் அதிகமாக எண்ணை குறித்து பேசப்பட்டு வருவது அனைவருக்குமே தெரியும். நான் ஒரே ஒரு விஷயத்தை தெளிவு படுத்த இந்த வீடியோவை பதிவிட்டேன். எல்லோராலும் லிரிக்ஸ் சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. நானும் லிரிக்ஸ் தப்பாக பாடியிருக்கிறேன். அதை ஏற்றுக் கொள்கிறேன்.

Judge sung wrong lyrics for verithanam song which is getting viral on social media

ஆனால், நான் அவர் நோட் தப்பாக இருக்கிறது என மட்டும் தான் கூறினேன். அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார்கள் ‘ என பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Share this post