மேடையில் படுகிளாமரான உடையில் அனிருத்துடன் பாடி அதகளம் செய்த ஜோனிதா காந்தி.. வைரல் வீடியோ!

jonita gandhi singing and dancing in hot and glamour dress with anirudh

பிரபல பின்னணி பாடகியான ஜோனிட்டா காந்தி, ஹிந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி மொழி பாடல்களை பாடி வருபவர். தமிழ் மொழியில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மெண்டல் மனதில் பாடலை ஓ காதல் கண்மணி படத்திற்காக பாடினார். அதனைத் தொடர்ந்து, 24 படத்திற்காக மெய் நிகரா, அச்சம் என்பது மடமையடா படத்திற்காக இது நாள், காற்று வெளியிடை படத்திற்காக அழகியே போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

jonita gandhi singing and dancing in hot and glamour dress with anirudh

அதன் பின்னர், வேலைக்காரன் படத்தில் இறைவா, சங்க தமிழன் படத்தில் சண்டைக்காரி நீதான் போன்ற பல பிரபல பாடல்களை பாடியுள்ளார். டாக்டர் படத்திற்காக செல்லமா பாடலை பாடிய இவர், அதன் லிரிக்கல் வீடியோவில் நடித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர். பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்காகவும் ஆடியுள்ளார்.

jonita gandhi singing and dancing in hot and glamour dress with anirudh

ஹிந்தி, பஞ்சாபி, தமிழ், மராத்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என பாடல்கள் பாடி வரும் ஜோனிட்டா, விக்னேஷ் சிவன் - நயன் அவர்களின் ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் Walking/Talking Strawberry Icecream என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலயில், இவரது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் இவர், மேடையில் கவர்ச்சி உடையில், அனிருத்துடன் பாடல் பாடியபடி பர்ஃபாம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post