'இதுல வேற வழியில்ல.. அனிருத்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன்' ஓப்பனாக சொன்ன ஜோனிதா காந்தி !

Jonita gandhi about marrying anirudh in award function

பிரபல பின்னணி பாடகியான ஜோனிட்டா காந்தி, ஹிந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி மொழி பாடல்களை பாடி வருபவர். தமிழ் மொழியில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மெண்டல் மனதில் பாடலை ஓ காதல் கண்மணி படத்திற்காக பாடினார்.

அதனைத் தொடர்ந்து, 24 படத்திற்காக மெய் நிகரா, அச்சம் என்பது மடமையடா படத்திற்காக இது நாள், காற்று வெளியிடை படத்திற்காக அழகியே போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

Jonita gandhi about marrying anirudh in award function

அதன் பின்னர், வேலைக்காரன் படத்தில் இறைவா, சங்க தமிழன் படத்தில் சண்டைக்காரி நீதான் போன்ற பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.

டாக்டர் படத்திற்காக செல்லமா பாடலை பாடிய இவர், அதன் லிரிக்கல் வீடியோவில் நடித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர்.

Jonita gandhi about marrying anirudh in award function

தற்போது பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்காகவும் ஆடியுள்ளார். ஹீரோயின் விட நீங்க சூப்பர் என மீம் போடு வருகின்றனர்.

ஹிந்தி, பஞ்சாபி, தமிழ், மராத்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என பாடல்கள் பாடி வரும் ஜோனிட்டா, விக்னேஷ் சிவன் - நயன் அவர்களின் ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் Walking/Talking Strawberry Icecream என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.

Jonita gandhi about marrying anirudh in award function

தற்போது, இவர் பதிவிடும் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகை பொருத்தவரை தற்போது அனிருத் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவ்வாறு டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் அனிருத், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

Jonita gandhi about marrying anirudh in award function

பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியாவுக்கு முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம், சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல் கீர்த்தி சுரேஷை அவர் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது பின்னர் இருவரும் நண்பர்கள் எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Jonita gandhi about marrying anirudh in award function

இதுதவிர பிரபல பாடகியான ஜோனிடா காந்தியும், அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன.

Jonita gandhi about marrying anirudh in award function

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட பாடகி ஜோனிடா காந்தியிடம், ரன்வீர் சிங், சூர்யா, அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

இவர்களில் அனிருத் தான் சிங்கிளாக இருக்கிறார். அதனால் அவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என ஜோனிடா கூறியுள்ளார்.

Jonita gandhi about marrying anirudh in award function

ஜோனிடாவின் இந்த பதில் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அனிருத்தும் ஜோனிடா காந்தியும் இணைந்து டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா, பீஸ்ட் படத்துக்காக அரபிக் குத்து, டான் படத்தில் பிரைவேட் பார்ட்டி என ஏராளமான ஹிட் பாடல்களை பாடியது குறிப்பிடத்தக்கது.

Share this post