AK61ல் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதை ட்வீட் மூலம் உறுதி செய்த பிரபல தமிழ் பட நடிகர் ! Viral Tweet

John kokken tweets with suspense fans believe he is onboarding ak61 movie soon

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK61. இப்படம் குறித்து பல விதமான தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதாவது, அஜித் இப்படத்தில் இரு வேடத்தில், ஹீரோ மற்றும் வில்லன் ரோலில் பல ஆண்டுகள் கழித்து நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் ப்ரீ-production வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

John kokken tweets with suspense fans believe he is onboarding ak61 movie soon

இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதில் கதாநாயகியாக தபு, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது. தற்போது, பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ‘சர்பட்ட பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜான் கொக்கன் ​​AK61ல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

John kokken tweets with suspense fans believe he is onboarding ak61 movie soon

தற்போது, ஜான் கொக்கன் வெளியிட்டுள்ள பதிவு AK61 படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்துள்ளார் என சொல்லப்படுகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ‘கனவு நனவாகிறது. நீ நம்புவதை இந்த உலகம் உன்னிடம் கொண்டுவரும். என் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா’ என பதிவு செய்துள்ளார். ஆனால் இவர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது உறுதியாகிவிட்டதை அவர் மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

John kokken tweets with suspense fans believe he is onboarding ak61 movie soon

Share this post