‘ஜிகர்தண்டா 2’.. வீடியோவாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ் !

Jigarthanda 2 announcement video posted by karthik subbaraj

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த கார்த்திக் சுப்ராஜ், பீஸா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தவர். இதனைத் தொடர்ந்து, 2014ம் ஆண்டு, சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

Jigarthanda 2 announcement video posted by karthik subbaraj

மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா கேங்ஸ்டராக மிரட்டி இருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி இதில் அசால்ட் சேதுவாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அத்துடன் இப்படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு தேசிய விருது கிடைத்தது.

Jigarthanda 2 announcement video posted by karthik subbaraj

இவ்வாறு இரண்டு தேசிய விருதுகளை வென்ற இப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்கள் ஆகும் நிலையில், இதற்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Jigarthanda 2 announcement video posted by karthik subbaraj

அதில் ஜிகர்தண்டா படத்தின் மேக்கிங் காட்சிகள் சிலவற்றை சேர்த்திருந்த அவர், இடையிடையே மதுரை பேமஸ் ஜிகர்தண்டா தயாரிப்பதையும் போட்டு இறுதியில் இரண்டு ஜிகர்தண்டா டேபிளில் இருப்பது போன்று முடித்து, படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Jigarthanda 2 announcement video posted by karthik subbaraj

தற்போது அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். முதல் பாகத்தை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share this post