'எனக்கு training குடுத்த karthi, குதிரைலேந்து கீழ விழுந்துட்டாரு.. கார்த்தியை கலாய்த்த ஜெயம் ரவி..

Jeyam ravi trolls karthi about incident happened in ponniyin selvan shooting spot

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

Jeyam ravi trolls karthi about incident happened in ponniyin selvan shooting spot

மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

Jeyam ravi trolls karthi about incident happened in ponniyin selvan shooting spot

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

Jeyam ravi trolls karthi about incident happened in ponniyin selvan shooting spot

இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Jeyam ravi trolls karthi about incident happened in ponniyin selvan shooting spot

படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.

Jeyam ravi trolls karthi about incident happened in ponniyin selvan shooting spot

முக்கிய கதாபாத்திரங்களின் பெயருடன் புகைப்படத்தை வெளியிட்டனர். இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் டீசர், விக்ரமின் மேக்கிங் வீடியோ என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் கூட்டி வருகிறது. பிரம்மாண்டத்தின் உச்சமாய் உருவாகி வரும் இந்த மேக்கிங் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Jeyam ravi trolls karthi about incident happened in ponniyin selvan shooting spot

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டோர் இப்பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இந்த விழா நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி ஷூட்டிங் போது நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், படத்தின் ஷூட்டிங் குறித்தும் பேசியுள்ளார்.

Share this post