Viral Video: விஜய் & மகேஷ் பாபுவை தாக்கி பேசினாரா ஜெயம் ரவி.. மாட்டிவிட்ட விக்ரம்.. வைரலாகும் வீடியோ !
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.
விரைவில் இதன் இரண்டாம் பாகத்திற்காக ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இப்படம் வெளியாகும் முன் ப்ரோமோஷன்காக விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா என படக்குழுவினர் இந்தியா முழுவதும் சென்று பல பேட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர்.
அப்படி தமிழில் பேட்டியொன்றில் சியான் விக்ரம், ஜெயம் ரவி பற்றிய சில சம்பவங்களை சுவாரஸ்யமாக கூறியுள்ளார். விமானத்தில் பயணித்த போது ஜெயம்ரவி என்னிடம் பேசிய போது, ஏன் அந்த நடிகர் அம்மா செத்தாலும் அதே ரியாக்ஷன், காதல் வந்தாலும் ஒரே எக்பிரஷன் எல்லாத்துக்கும் ஏன் ஒரே எக்பிரஷ்ன் கொடுக்குறாரு என்று கிண்டல் செய்தார். அவரை எனக்கு நல்லா தெரியும் என் நண்பர் என்று கூறினேன். அதான் எப்படிங்க என்று ஷாக்காகி கேட்டுள்ளார் ஜெயம்ரவி.
தற்போது அந்த நடிகர் யார் என்றும், விஜய் அல்லது மகேஷ் பாபுவை தான் கூறுகிறார் என்றும் ஒரு போரே இணையத்தில் நடந்து வருகிறது. விஜய் மீது நல்ல ஒரு மரியாதை வைத்திருக்கிறார் ஜெயம்ரவி அதனால் அவரை கூறி இருக்கமாட்டார். அது மகேஷ் பாபு தான் என்று விஜய் ரசிகர்கள் சொல்ல, அது விஜய் தான் கூறியுள்ளார் என்று மகேஷ் பாபு ரசிகர்கள் மாறிமாறி சண்டைப்போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே இதுகுறித்து ஜெயம் ரவி டிடி நிகழ்ச்சியில் கூறிய வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மேலும், ஒரு நிகழ்ச்சியில், விஜயின் ரசிகர் நான் என சொன்ன ஜெயம் ரவி, ஆனா அதுக்காக அவரோட போட்டோ எல்லாம் போட்டு எல்லாம் ரொம்ப பண்ண மாட்டேன். ஆனா அவரு பேன் தான் என கூறியுள்ளார்.
Chiyaan's Direct attack on @urstrulyMahesh !🤣🍉🔥#Varisu pic.twitter.com/5CvZs7d9Qh
— ⱽʲ VIPER ♠️ (@VJViper_jd7) October 5, 2022
Actor Jayam Ravi about my darling mabbu akka Expression😍 pic.twitter.com/cnVtEqQnpK
— MD ⚡ (@Thalapathyvj_md) October 5, 2022
Meanwhile Jayamravi about Vijay https://t.co/5UFkxl1gzH pic.twitter.com/5t0HxHl1iT
— BOOZER (@boozer_hand) October 5, 2022
. @actorvijay thaakka pattar😂. vikram ennoda frnd nu vera soldran 😂 pic.twitter.com/sfKhfSST7J
— M@ssu engira M@silamani (@Villain_massu) October 5, 2022