ஜெயம் ரவியின் ‘அகிலன்’ மிரட்டலான மேக்கிங் வீடியோ.. வெளியான செம அப்டேட்

Jayam ravi agilan making video getting trending

பிரபல எடிட்டர் மோகன் அவர்களின் இளைய மகன் ஜெயம் ரவி. தெலுங்கு மொழியில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி.

ரவி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், தனது முதல் படமான ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்த இவர், ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வருகிறார்.

Jayam ravi agilan making video getting trending

தனது சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி நடித்த ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இவர், எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, மழை, உனக்கும் எனக்கும் போன்ற அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

Jayam ravi agilan making video getting trending

தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், போகன், கோமாளி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பூமி திரைப்படத்திற்கு பிறகு, ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அகிலன்.

Jayam ravi agilan making video getting trending

‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் 28வது திரைப்படம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கியது.

ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வத்திக்குச்சி, காலா, ரைட்டர் படங்களில் நடித்த திலீபன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.

Jayam ravi agilan making video getting trending

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்திலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

Jayam ravi agilan making video getting trending

ஜெயம் ரவி கப்பல் மாலுமியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இதையடுத்து இப்போது படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

Jayam ravi agilan making video getting trending

மேலும் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

Share this post