'விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் ஆகிவிட்டது..' உண்மையை போட்டுடைத்த நடிகை
சின்னத்திரை சீரியல் இயக்குனராக தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் தேவரக்கொண்டா, Nuvvila என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். Life is Beautiful, Yevade Subramanyam போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
பின்னர், Pelli Choopulu என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரும் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, Ye Mantram Vesave, நோட்டா, World Famous Lover, Dear Comrade, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது, சமந்தாவுடன் குஷி, பூஜா ஹெக்டேவுடன் Jana Gana Mana போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான Liger திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அவரது அடுத்த படமும் ட்ராப் ஆகிவிட்டது. அதனால் விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
மேலும் அவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் அதை இதுவரை வெளிப்படையாகி ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் சமீபத்தில் ஜோடியாக மாலத்தீவுக்கும் டேட்டிங் சென்றனர். இந்நிலையில், ஸ்ரீதேவி மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொள்ள, அப்போது “உங்கள் சுயம்வரத்திற்கு யார் எல்லாம் வரவேண்டும்” என தொகுப்பாளர் கேட்க ஹிரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர், டைகர் ஷ்ரோப் ஆகியோர் பெயரை கூறினார்.
திருமணம் ஆகாதவர்கள் பெயரை மட்டும் சொல்லுங்கள் என தொகுப்பாளர் சொல்ல ஜான்வி சற்று நேரம் யோசித்தார். விஜய் தேவரகொண்டா பெயரை தொகுப்பாளர் சொல்ல, ‘அவர் practically married’ என ஜான்வி கூறி நிராகரித்து இருக்கிறார். அதனால் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கிட்டத்தட்ட திருமணம் ஆனவர்கள் போல வாழ்த்து வருகிறார்கள் என்பது உறுதியாகி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.