Viral Video: அமுதவாணனுடன் நாமினேஷன் பற்றி CodeWordல் பேசிய ஜனனி.. Groupism பற்றி அப்டி க்ளாஸ் எடுத்தாங்க.. இப்போ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த சீசனில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்மி பெற்றவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இந்த சீசன் லாஸ்லியா இவர் தான் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்து வருவது இவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது.
ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். அதேபோல் இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார். ஜனனி வர வர மோசமாக நடந்துகொள்ள ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன்’க்கு முன்பு அவர் தனது இணை போட்டியாளர்களுடன் குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிய விடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யாரை நாமினேட் செய்வது என்று தனக்குத் தெரியவில்லை என்று ஜனனி அமுதவாணன் மற்றும் தனலட்சிமியிடம் கூறுகிறார்.
அதற்கு உடனே அமுதவாணன் ‘ஆயிஷா எங்கே? என்று கேட்க, அமுதவாணன் அப்படி சொன்னதும் ஜனனியும் தனலட்சுமியும் சிரித்தனர். அவரைத் தொடர்ந்து, தனலட்சுமி ‘ADK சாப்பிட்டாரா’ என்று கேட்க, ஜனனி, ‘கதிரவன் பக்கத்துல இருக்காரு’ என கூறினார். இதனையடுத்து, இந்த வார பிக்பாஸ் நாமினேஷன் தேர்வு நடந்தது. அதில் அமுதவாணன், ஜனனி, ஆயுஷாவையும், கதிரவணையும் தேர்வு செய்தனர். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கதிரவன், ஆயிஷா, அசீம் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இப்படி கலந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகவே இவர்களின் மீது கடுமையான கண்டனங்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். மேலும், குரூப்பிஸம் பற்றி ஜனனி இதற்கு முன்னர் பேசிய வீடியோவையும் பதிவிட்டு அதனை வைரல் செய்து வருகின்றனர்.
Kurupism Exposed 💯#Amudhavanan #Janany
— stanning a pure soul 🕊️ (@sparkxxx_) December 5, 2022
used code words to nominate #VJKathirravan and #Ayesha@ikamalhaasan should give them a warning!!! @disneyplusHSTam @vijaytelevision this should be in main episode !!!#BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/Drry5HfVWA