Viral Video: 'எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு..' ரச்சிதா குறித்து மோசமாக பேசிய ஜனனி.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த சீசனில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்மி பெற்றவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இந்த சீசன் லாஸ்லியா இவர் தான் என்று பலரும் கூறி வந்தனர்.
ஆனால் கடந்த சில வாரங்களாக இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்து வருவது இவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது. ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். அதேபோல் இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார்.
ஜனனி வர வர மோசமாக நடந்துகொள்ள ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். அண்மையில், அவர் ரச்சிதாவை பற்றி மோசமாக விமர்சனம் செய்ய, அந்த வீடியோவை போட்டு ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
#Janany comments #Rachitha as Eruma madu ku katti vitta maari iruku.... Day by day Jan behaviour so cheap. Criticize #Ayesha illnesses... #Vikraman tamil issue.. now @Rachu... Really worst behaviour #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/15IWVGGn8N
— தேவிகா துளசி (@Devika_tulasi) November 28, 2022